இலங்கையில் 50வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றல்!

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 89,73,670 பேர் Sinopharm தடுப்பூசியும் அஸ்ட்ராசெனேக்கா தடுப்பூசியை 949,105 பேரும் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் 758,282 பேருக்கு மொடேர்னா தடுப்பூசியும் 243,685 பேருக்கு பைசர் தடுப்பூசியும் 43,453 பேருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 9 இலட்சத்து 68,195 பேர் இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles