இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறுமா பொன்சேகாவின் புத்தகம்?

போர் தொடர்பில் இறுதிக்கட்ட போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எழுதியுள்ள நூல் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படவுள்ளது என தெரியவருகின்றது.

ஜனாதிபதி தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் குறித்த நூல் வெளிவருவதால் தேர்தல் களத்திலும் அந்நூல் பேசுபொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போர் தொடர்பில் இதற்கு முன்னர் இரண்டாம் நிலையில் இருந்த தளபதிகள் நூல் எழுதி இருந்தாலும், இறுதிகட்ட போரை வழிநடத்திய இராணுவ தளபதியால், எழுதப்பட்டுள்ள முதல் நூல் இதுவாகும்.

முக்கியமான இரகசியங்களை குறித்த நூல் ஊடாக பொன்சேனா அம்பலப்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles