இலங்கை சிங்கள, பௌத்த நாடு: சரத் வீரசேகர கொக்கரிப்பு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டுவருகின்றது எனவும், தமிழ்ப் பிரிவினைவாதிகளை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கையென்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்தபோதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.
வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்கள குடும்பங்கள் இருந்தன. இன்று ஒருவர்கூட இல்லை. மட்டக்களப்பிலும் சிங்களவர்கள் இல்லை.

கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழர்களே வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றனர். இதற்கு சிங்களவர்கள் தடை ஏற்படுத்துவதில்லை. நிலைமை இப்படி இருந்தும் சிங்களவர்களுக்கே இனவாத முத்திரைக் குத்தப்படுகின்றது.
அதிகாரத்துக்காக தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இராணுவ அமைப்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்ப் பிரவினைவாதிகளை மட்டுமே சந்தித்தார். இரு தரப்புகள் இருப்பதை அரசாங்கம் அவருக்கு சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.” – என்றார் சரத் வீரசேகர.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles