இலங்கை தமிழர்களுக்காக திரையுலகை அணிதிரட்டிய வீரத் தமிழன் விஜயகாந்த் – மனோ இரங்கல்

இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய  “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்”என உணரப்பட்டவர், அமரர் விஜயகாந்த் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழக தேதிமுக தலைவர், நடிகர் விஜயகாந்த் மறைவு தொடர்பில், மனோ எம்பி மேலும் கூறியதாவது,

விஜயகாந்த், தமிழ்நாட்டு திரை வானிலும், பின் அரசியல் வானிலும்  சூறாவளியாக எழுந்தார். இடையில் திடீரென அமைதி தென்றலானார்.

புரட்சி கலைஞர் என்ற தமிழ் நடிகர், தேதிமுக தலைவர் என்ற எழுச்சி  அரசியலர் என்ற பிரபல அடையாளங்களை மீறி சிறந்த மனிதர் என ஒட்டுமொத்த தமிழுலகில் அறியப்பட்டார்.

கடல் கடந்து இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியில், எம்மை நேசித்த, எமக்காக தமிழ் திரையுலகை அணி திரட்டிய, மதுரை மண்ணுக்கே உ ரிய வீரத்தமிழனாய் எமக்காக குரல் எழுப்பிய  “தாய்த்தமிழக தொப்புள் கொடியான்”  என உணரப்பட்டவர், திரு. விஜயகாந்த்.

தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக,  ஒட்டுமொத்த இலங்கை வாழ் தமிழர்களின்  அஞ்சலிகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கும், அவரது தேதிமுக கட்சியினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன். ” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles