இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பதாக ஜூன் 17ஆம் திகதி வெளியாகியிருக்கும் செய்திகள் அனைத்தும் முற்றுமுழுதாக உண்மைக்குப் புறம்பானவையாகும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதுரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
” இவ்வாறான எந்தவொரு சம்பவமும் இடம்பெற்றவில்லை என நாம் மிகவும் உறுதியாக தெரிவிக்கின்றோம்.
மிகவும் உயர்ந்த ஒழுக்கத்தையும், தொழில்திறனையும் கடைப்பிடித்து வரும் இந்திய கடற்படை குற்றமற்ற வகையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்றி வருகின்றது.
ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் இருதரப்பு பொறிமுறைகள், புரிந்துணர்வுகள் ஆகியவற்றின் ஊடாக இலங்கை இந்திய மீனவர்கள் சம்பந்தமான சகல பிரச்சினைகளுக்கும் ஒரு மனிதாபிமான அடிப்படையில் தீர்வைக் காண இந்தியா மிகுந்த உறுதிப்பாட்டுடன் உள்ளது.” – என்றார்.
