இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார்? உடனடியாக ஆராய வேண்டும்- வஜிர அபேவர்தன

இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார் என்பது குறித்து உடனடியாக ஆராய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய தருணம் இதுவாகுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகின் வலிமையான தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும், அத்தகைய தலைவரை அழிப்பதற்கு சிலர் முனைவதன் காரணமாக அவரை பாதுகாப்பது எமது கடமை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், பயங்கரவாதத் தடைச் சட்டமானது கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் அமுலில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாட்டின் வங்குரோத்து நிலை சர்வதேச நாடுகளுக்கு தேவைப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடாத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்கலைக்கழக அமைப்புகள் உலகில் அவமானகரமான நிலையை அடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles