கம்பஹா மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்கவின் உறவினர் வீட்டில் வீட்டு பணி பெண்ணாக பணியாற்றி வந்த மற்றுமொரு மலையாக சிறுமி சடலமாக வெள்ளிக்கிழமை (19) வீட்டின் நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

மஸ்கலியா மொக்கா தோட்டத்தின் கீழ் பிரிவில் வசித்து வந்த 17 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்’ இவர் கடந்த ஆறு மாத காலமாக பாராளுமன்ற உறுப்பினரின் உறவினர் வீட்டில் பணி பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார் என்பது தெரிய வருகிறது. மேலும் இவருக்கு தந்தை உயிருடன் இல்லாத நிலையில் தாய் வேறொரு திருமணத்தை செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வரும் நிலையில் சிறுமி தனது மாமாவின் வீட்டில் வசித்து வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.
அன்று இரவு படுக்கைக்கு செல்லும் முன் கையடக்க தொலைபேசியில் பேசிய வண்ணம் வீட்டில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழும் காட்சி அங்கு பொறுத்த பட்டிருந்த சீ.சீ.டிவி.கமராவில் பதிவாகி உள்ளது
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கம்பஹா மற்றும் மஸ்கலியா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். வீட்டு பணிப்பெண்கள் தொடர்பில் பல்வேறு சட்டங்களை கொண்டு வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக மலையக சிறுமிகள் வெளி மாவட்டங்களில் பணிப்பெண்களாக அமர்த்தப்படுவதும் உயிரிழக்கும் சம்பவங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமே .
கெளசல்யா
மஸ்கெலியா நிருபர்
