ரத்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஜயரத்ன மாவத்தை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில், கடவையில் இளைஞர் ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ளார்.
ரத்கம, கம்மத்தேகொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கி பயணித்த ரயில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் மோதி படுகாயமடைந்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










