பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான், இஸ்ரேல் போராக மாறிவருகின்றது.
குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் பலியாயினர்.
இதற்கிடையே நேற்று முன் தினம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் ஈரான் இராணுவ தளபதியான அப்பாஸ் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்தது.
இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து ஈரானுக்கு எதிராக தக்க பாடம் கற்பிக்க ஈரான் முடிவு செய்திருக்கிறது.
அதேவேளை, லெபனானில் உள்ள ஆஸ்திரேலியர்களை உடன் வெளியேறுமாறு லேபர் அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.