இஸ்ரேல், அமெரிக்கா கூட்டு சதி: ஈரான் கடும் சீற்றம்!

சிரியாவில் நடப்பது எல்லாம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் ஒரு பகுதி என ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான கிளர்ச்சிப் படை சமீபத்தில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது.

இதன் மூலம் அதிபர் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது மட்டுமின்றி, 13 ஆண்டுகால உள்நாட்டுப்போரும் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து அசாத்தின் பதவி கவிழ்க்கப்பட்டபின், வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன, போக்குவரத்து மீண்டும் தொடங்கியது, கடைகள் திறக்கப்பட்டன.

சிரியாவின் அடுத்தடுத்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்றும், சிரியாவில் புதிதாக அமைந்துள்ள அரசு எவ்வாறு செயல்படும் என்பது குறித்தும் உலகநாடுகள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

இத்தகைய சூழலில்தான், “சிரியாவில் நடந்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் விளைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதரங்களும் எங்களிடம் உள்ளன” என ஈரானின் Supreme Leader அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், துருக்கியையும் மறைமுகமாக சாடிய அவர், ஒவ்வொரு நாட்டின் இலக்கும் வேறு என்றும், ஒரு நாடு சிரியாவின் நிலங்களைக் கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்க இந்த பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles