இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எடுத்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று அஞ்சப்படுகிறது. இப்படி அங்குப் பதற்றமான சூழலே நிலவி வரும் நிலையில், திடீரென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட் பதவி நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பாக பேசப்படுகின்து.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சராக கேலன்ட் இருந்து வந்த நிலையில், இப்போது அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கேலன்டிற்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.