பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சூழல் உருவானதற்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சு நடத்த ரஷ்யா முன்வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அகதிகளாக வந்த யூதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக 90 சதவிகிதத்திற்கும் அதிகமான பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியுள்ளனர். கடந்த 1947ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இது அரங்கேறியுள்ளது. இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடிய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் மீது இஸ்ரேல் மேற்கு நாடுகளுடன் கைகோர்த்து தாக்குதலை நடத்தி இருந்தது. எனவே பொறுத்து பொறுத்து பார்த்த இந்த குழுக்கள் ஆயுதங்களை கையில் ஏந்த தொடங்கினர். இது 1980களில் அதாவது இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை தொடங்கி 40 ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது.
