இ.தொ.காவிடம் பிரான்ஸ் தூதுவர் வழங்கியுள்ள உறுதிமொழி (படங்கள்)

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்துக்கு இதன்போது பிரான்ஸ் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும், அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்தார்.

இதன்மூலம் பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடி பங்களிப்பை வழங்கும் என பிரான்ஸ் தூதுவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிரி பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார், தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles