இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் பொதுச் செயலாளராக ஜெயராஜ் அர்ஜூன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இளைஞர் அணியை வலுவூட்டும் வகையில் புதிய நியமனங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இ.தொ.கா.வின் இளைஞர் அணியின் தலைவராக கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொதுச் செயலாளராக ஜெயராஜ் அர்ஜூன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் பொதுச் செயலாளராக பதவியேற்றப் பின்னர் இளைஞர் அணியை வலுவூட்டுவதில் அதிக அக்கறை செலுத்தப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.