கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்க வேண்டாம். விமல் வீரவன்ஸவுக்கு வாக்களியுங்கள் எனத் தேர்தல் பரப்புரை செய்யும் தமிழர்கள், தமிழ் இனத்தின் துரோகிகளாகக் கருதப்படுவார்கள். மலையக மக்கள் தொடர்பில் ‘அப்பா கனவு கண்டார்’ என்று குறிப்பிடுகின்றார்கள். குறுகிய காலத்தில் கனவுகளை முடிந்தவரை நாங்கள் நிறைவேற்றினோம். மலையகத்தில் நாங்கள் செய்த சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் மீண்டும் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெயிலா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம் பரம் தெரிவித்தார்.
கொழும்பு வாழ் மலையக இளைஞர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் மலையகத்துக்கு எவ்வளவு முக்கியமோ அதுபோலவே, கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் முக்கியமான தேர்தல்.
இந்தநிலையில் கொழும்பு வாழ் தமிழர்கள் மனோ கணேசனுக்கு வாக்களிக்கக் கூடாது எனவும், அமைச் சர் விமல் வீரவன்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கூறும் தமிழர்கள் தமிழினத்தின் துரோகிகளாகக் கருதப்
படுவார்கள்.
அப்பா கனவு கண்டார் என சிலர் கூறுகிறார்கள். ஆனால், மலையகம் தொடர்பில் கனவு கண்டவர்கள் நாங்கள். நாம் கண்ட கனவே இன்று நிறைவேறியுள்ளது. .தமிழ் முற்போக்குக் கூட்டணி யின் தலைவர் மனோ கணேசன் சிறந்த தலைவர். பொதுத்தேர்தலில் வெற்றி பெறுவது அல்லது தோல்வியடைவது என்பது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டும். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் கூட வெற்றிபெற வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஆனால், அவர்கள் நான் தோல்வியடைய வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
நான் அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் எனது உறவினர்கள் எவருக் கும் எனது அமைச்சில் தொழில் வழங்கவில்லை. எனது மகனுக்கான பெற்றோர் கூட்டங்களில்கூட இதுவரை யில் கலந்துகொண்டதில்லை. மலையகத்தில் நான் இதுவரையில் செய்த சேவையைத் தொடரவே அதிகாரத்தைக்கேட்கின்றேன் – என்றார்.