” நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணையவில்லை. எனவே, காங்கிரஸாஸ் பரப்படும் வதந்திகளை நம்பவேண்டாம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஒஸ்போன் கீழ்பிரிவு தோட்ட தலைவர் கருப்பையாபிள்ளை சுப்பிரமணியம் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஒஸ்போன் கீழ்பிரிவு தோட்ட தலைவர், டிக்கோயா
பிரதேச அமைப்பாளர் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இணைந்துகொண்டனர் என கடந்த 27 ஆம் திகதி செய்தி வெளியிடப்பட்டது. இ.தொ.கா. பிரமுகர்களுடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஒஸ்போன் கீழ்பிரிவு தோட்ட தலைவர் கூறியதாவது.
” நான் 40 வருடங்களாக தோட்ட தலைவராக இருக்கின்றேன். ஆரம்பத்தில் செங்கொடி சங்கத்திலும் தற்போது மலையக மக்கள் முன்னணியிலும் அங்கம் வகிக்கின்றேன். வேறு எந்த கட்சி பக்கமும் செல்லவில்லை. எவரிடமும் பணம் வாங்கவும் இல்லை.
கடந்த 26 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது காங்கிரஸ் பிரமுகர்கள் எம்முடன் புகைப்படம் எடுத்தனர். தற்போது அதனை வைத்து பிரச்சாரம் செய்கின்றனர்.” – என்றார்.