ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலின் எதிரொலி: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் அதிகரித்துள்ளது.

இதன்படி, பிரென்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.5 சதவீதத்தினால் அதிகரித்து 105.25 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.5 சதவீதத்தினால் அதிகரித்து 96.93 டொலர்களாக உயர்ந்துள்ளது.

எனினும், திங்கட்கிழமை வர்த்தக முடிவில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்திருந்தது.

அன்றைய தினம் பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.63 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து 104.77 டொலர்களாகப் பதிவாகியிருந்தது.

உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையில் அதிகரித்து வரும் பதற்றம், சர்வதேச எரிசக்திச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles