ஈரான் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 65 ஆக அதிகரிப்பு!

ஈரானின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், பலியானவர்கள் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ராஜேய் துறைமுகம் உள்ளது.

பாரசீக வளைகுடாவில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள இந்த துறைமுகம் வாயிலாக ஒவ்வொரு ஆண்டும், 8 கோடி டன் அளவுக்கு பொருட்கள் கையாளப்படுகின்றன.

இந்த துறைமுகத்தில் இருந்த கன்டெய்னரில் இருந்து திடீரென மர்மபொருள் வெடித்து சிதறியது. இதனால் அப்பகுதி முழுதும் கரும்புகை ஏற்பட்டது. இந்த விபத்தில், பலி எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. 750க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தீ விபத்து மற்றும் அதை தொடர்ந்த வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ஏவுகணைகளுக்கான எரிபொருட்கள் தீப்பிடித்து, விபத்து நடந்திருக்க வேண்டும் என தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்கான காரணத்தை ஈரான் அரசு மூடி மறைத்து வருகிறது. இதனால் விபத்து ஏற்பட்ட காரணத்தில் மர்மம் நீடிக்கிறது.

Related Articles

Latest Articles