உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய தங்களது சிறையில் அடைத்து உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைனின் குற்றச்சாட்டு உண்மையானதா என்று ரொய்ட்டர் செய்தி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தற்போது உக்ரைன்-ரஷ்ய போர் 50ஆவது நாளை நெருங்கிவரும் நிலையில் போர் வீரியம் இன்னும் அதிகமாகலாம் என்று கூறப்படுகிறது.