உடபளாத்த பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

 

உடபளாத்த பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 45 பிரதேச சபை உறுப்பினர்களினதும் ஏகமனதான பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

சபையின் தலைவர் சாந்த நவரட்ண தலைமையில் நடைபெற்ற சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டம், எவ்வித வாதப் பிரதிவாதங்களுமின்றி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

*இந்த வரவு – செலவுத் திட்டத்தில் புசல்லாவை நகரப் பிரதேசத்திற்கான முக்கிய அபிவிருத்தித் திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.*

அவற்றில்,

1. புசல்லாவை நகரில் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள தகனச்சாலைக்கு அருகில் இரங்கல் மண்டபம் ஒன்றை நிர்மாணித்தல்.

2. புசல்லாவை நகர மண்டபத்தை இரண்டு மாடிக் கட்டிடமாக நிர்மாணித்தல்.

3. புசல்லாவை பழைய பிரதேச சபை அலுவலகக் கட்டிடத்தை அபிவிருத்தி செய்து, பொதுமக்களுக்குப் பயனுள்ள சேவைகளை வழங்கும் வகையில் தொழில் வாய்ப்பு அலகு அல்லது வங்கி கிளை போன்ற நிறுவனங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

புசல்லாவை நகர மக்களின் நீண்டகாலத் தேவைகளையும், எதிர்கால அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு இத்திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

*அபிவிருத்தி என்பது அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. மக்களின் தேவைகளுக்காக அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது வரவேற்கத்தக்க விடயமாகும்.*

இந்தத் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என நம்புகிறேன்.

*மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் எமது பயணம் தொடரும்!*

— மயில்வாகணம் கவாஸ்கர்
உடபலாத்த பிரதேச சபை உறுப்பினர்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles