உணவு ஒவ்வாமையால் 35 மாணவர்கள் பாதிப்பு: வட்டவளை வைத்தியசாலையில் அனுமதி!

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 35 மாணவர்கள் , உணவு ஒவ்வாமையால் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளான நிலையில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெம்பஸ்டோவ். தோட்டப் பாடசாலையில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட பின்னரே மாணவர்களுக்கு இவ்வாறு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர் .

குறித்த பாடசாலையின் 3ஆம் ஆண்டு முதல் 5ஆம் ஆண்டு வரையான மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாரும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் தனித்தனியாக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles