‘உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வு’  -கொழும்பிலிருந்து ஊர் நோக்கி செல்லும் மக்கள்!  

சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்தகையோடு,  ஹோட்டல்களில்  உணவுப்  பொருட்களின்  விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளது.

ரோல்ஸ் உட்பட சிற்றுண்டி உணவுகள், கொத்து ரொட்டி, பராட்டா,  ப்ரைட் ரயில் மற்றும் சோறு பார்சல் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்கள் தமக்கு தேவையான விதத்தில் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது என ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கொழும்பில் நாட் கூலிக்கு வேலை செய்பவர்களும், தங்கியிருந்து தொழில் புரிபவர்களும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவேளையும் உண்பதற்கு நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் ரூபாவரை செல்கின்றது என  அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கொழும்பில் இருந்த சிலர், வாழ்க்கை சுமை அதிகரிப்பதால் தமது சொந்த ஊர்களை நோக்கி செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது

Related Articles

Latest Articles