உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2023 மே மாதம் 08 ஆம் திகதி “உண்ணாட்டரசிறை (திருத்தம்)” எனும் சட்டத்தை சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தச் சட்டமூலம் கடந்த ஏப்ரல் 28 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய, சபாநாயகர் சான்றுரைப்படுத்தியதை அடுத்து உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமூலம், 2023 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டமாக நடைமுறைக்கு வருகின்றது.

Related Articles

Latest Articles