இம்முறை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சைகள் திகதிகளில் எவ்வித மாற்றங்களையும் இதுவரை செய்யவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பரீட்சைகளைத் திட்டமிட்டப்படி நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், பரீட்சைத் திகதிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான எவ்வித தீர்மானமும் இதுவரை இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே, மாணவர்கள் திட்டமிட்டபடி பரீட்சைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள புதிய கொரோனா நெருக்கடியினால் இலங்கை பரீட்சைகள் திணைக்களம், சான்றிதழ் வழங்கும் பணிகளை ஒன்லைன் முறையில் மட்டும் முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைவரது சுகாதார பாதுகாப்பிற்காக பரீட்சைகள் திணைக்களத்திற்குள் பொதுமக்களின் வருகையைக் கட்டுப்படுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி மறு அறிவித்தல் வரை, ஒருநாள் மற்றும் சாதார சேவைக் கூடங்கள் தற்காலிகமாக மூடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கம்பபா, கொழும்பு மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அனைத்துவித மேலதிக வகுப்புக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.