உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆராய தெரிவுக்குழு தேவையில்லை!

” எமது நாட்டின் முத்தரப்பு ஜனநாயக கட்டமைப்பில், நிறைவேற்று , சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று நிறுவனங்களிலும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறையும், அதேபோல இவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறைபாடுகள் இருப்பின், தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலயே இது திருத்தப்பட வேண்டும்.” – என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு நிறுவனம் மற்றொன்றை அடக்கி அல்லது மௌனமாக்கும் பிம்பத்தை உருவாக்காதீர்கள். வேறு ஒரு முறையைப் பின்பற்றி, ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை சரிசெய்யும் அரசியலமைப்பு முறைக்குச் செல்ல வேண்டும்.

உயர் நீதிமன்றம் வழங்கிய முடிவுகளை ஆராய தெரிவுக் குழுக்களை நியமிப்பதில் எமக்கு உடன்பாடில்லை. குறைபாடுகள் இருப்பின் வேறு ஏற்றுக்கொள்ளத்தக்க சட்டரீதியான ஏற்பாடுகள் ஊடாக இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறினார்.

Related Articles

Latest Articles