’உற்பத்தி கூடினாலேயே பொருள் விலை குறையும்’

உற்பத்தி நடவடிக்கைகளை அதிகரித்தால் மட்டுமே பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா பேரழிவை அடுத்து இலங்கை உட்பட உலகின் அனைத்து நாடுகளும் பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில், இன்று (07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

மூடுங்கள், மூடுங்கள் என்று போராட்டம் நடத்தியபோது கடும் நெருக்கடியில் தீர்மானம் எடுத்தோம் என்ற அவர், மூட மூட உற்பத்தி குறையும் என்றும் மூட மூட மக்களின் சுயதொழில் இல்லாமல் போகும் என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles