‘உலகத் தமிழ் பாராளுமன்றம்’ அமைப்பு உதயம்!

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு பல பிரிவுகளை உருவாக்கி வருகிறது. அதில் அரசியல் பிரிவில் உலகத் தமிழ் பாராளுமன்றம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கி உள்ளது.

இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், கனடா, பப்புவா நியூ கினி கயானா போன்ற எட்டு நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  செனட்டர்கள் இன்றைய திகதியில் 147 பேரும், மத்திய அமைச்சர்களாக 14 பேரும் உள்ளனர்.

உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழ் இளைஞர்கள் அரசியலில் ஈடுபடவும் அரசியல் மூலம் தமிழர்கள் அரசாங்கத்தின் சலுகைகள் பெறவும் பல்வேறு நாடுகளில் உள்ள பொதுப் பிரச்சினைகளை அந்தந்த நாட்டு பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தீர்வு காணவும் இவ்வமைப்பின் நோக்கமாகும்.

அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருந்தாலும் தமிழராய்  பொதுப் பிரச்சினைகளை தீர்வு காணவும்இ பல்வேறு நாடுகளுக்கு நேரடியாக பயணம் செய்து அரசாங்கங்களுடைய அனுசரணையோடு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக தீர்வு காணவும்இ பல்வேறு நாடுகளுடன் இறையாண்மை உடன் நல்லுறவு ஏற்படுத்தவும் இவ்வமைப்பு செயல்படும்.

இவ்வமைப்பிற்கு பன்னாட்டு ஒருங்கிணைப்பாளராக செல்வகுமார், இலங்கைக்கு சுப்பிரமணிய தியாகுவும், சிங்கப்பூருக்கு ராஜேந்திர பூபதியும், மலேசியாவிற்கு தீனதயாளன்,மொரிஷியஸ்க்கு நித்யானந்தாவும், கனடாவிற்கு ஆலன் டீன் மணியம்இ கயானா மற்றும் பப்புவா நியூ கினிக்கு ஜனகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட உள்ளனர்.

உலகில் 13 கோடியே 60 லட்சம் தமிழர்கள் உள்ளனர். உலக மக்கள் தொகையில் 2மூ உள்ள தமிழர்களின் அனைத்து நாடுகளில் அரசின் பிரதிநிதி பெற்று மக்கள் நலனில் அக்கறை கொண்ட சமுதாயமாக மாற்றஇ முன்னெடுக்க வேண்டும் எனவும்இ விரைவில் எட்டு நாடுகளில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இணையவழியில் பொது விவாதம் ஒன்றை நடத்தவுள்ளோம் என உலகத் தமிழ் பாராளுமன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவருமான செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles