உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இதற்கான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்தார்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விவாதிப்பதற்காக நாடாளுமன்றமும் சனிக்கிழமை அவசரமாக கூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles