உழவர் திருநாளில் சோகம்! மழையால் பல ஏக்கர் நெல் வயல்கள் அழிவு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்யும் அடைமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஏக்கர் வயல்கள் நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2020 கால போகம் சுமார் 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 20 வீதமான வயல் நிலங்கள் நீரிழில் மூழ்கியுள்ளன என கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அறுடைக்கு தயாராக இருந்த பருவத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் எவ்வளவு ஏக்கர் அழிவடைந்துள்ளன என்பதனை வெள்ளம் வடிந்தோடிய பின்னரே மதிப்பீடு செய்யமுடியும் எனவும் கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

முரசுமோட்டை, பெரியகுளம், அக்கராயன், புதுமுறிப்பு, உருத்திரபுரம்,கண்டாவளை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தொடர்பு கொண்டு வினவிய போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களை அதிகாரிகள் சென்று பார்வையிட்ட பின்னர் வழக்கம் போல காப்புறுதி சபையினால் அவர்களின் நடைமுறைகளுக்கு அமைவாக இழப்பீடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும் எனத் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles