பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஊடக சுதந்திரம் மற்றும் சட்ட ஆதிக்கத்தை மலினப்படுத்தினால், எமது நாடு சர்வதேச ரீதியான புறக்கணிப்புக்கு உள்ளாகலாமென இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம் பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த நிலைக்கு நாடு தள்ளப்பட இடமளிக்கக்கூடாது என்றும், சுதந்திர ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கான நடவடிக்கைகள், அடிமைத்தன ஊடக முறைமைக்கு செல்வதற்கான முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான தீர்மானங்கள் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
பாராளுமன்ற சிறப்புரிமைக்கூடாக சுயாதீன நீதிமன்றம் மற்றும் சுயாதீன ஊடகச் செயற்பாடுகளை அடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை சிறந்ததல்ல. ஜனாதிபதியால் தான், இது செயற்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பது விசேட உறுப்பினர்கள் அல்ல. நாட்டின் சட்டத்துக்கு அமையவே அவர்கள் செயற்பட வேண்டும்.
சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் மூலம் பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, தற்போது அந்த ஊடக நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது










