தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

திம்புள்ள, பத்தன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்ட தொழிலாளர்கள் இன்று (21) பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் ஆகியோரை உடனடியாக இடமாற்றுமாறு வலியுறுத்தியே இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் இவர்கள் செயல்படுகின்றனர் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

தோட்ட காவலாளியொருவர் அண்மையில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்றுள்ளார்.

இது தொடர்பில் இன்று பெரட்டுக்களத்தில் வைத்து தொழிலாளர்கள் நீதி கோரியுள்ளனர்.

இதன்போது தொழிலாளர்களுக்கும், தோட்ட முகாமைத்துவத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அவ்வேளையில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சாணத்தை கரைத்து இவர்கள்மீது சிலர் ஊற்றியுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.

(மேலதிக தகவல்கள் விரைவில்….)

(இச்சம்பவம் தொடர்பில் நிர்வாக தரப்பில் இருந்தும் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.)

செ.தி.பெருமாள்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles