தனிமைப்படுத்தல் ஊரடங்குக் சட்டத்தை மீறி, பதுளை மாநகரில் சுற்றித் திரிந்த 40 பேர் கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியிருப்பதாகவும் , அவர்கள் அனைவரும் (இன்று) 17.9.2021 ல் உரிய சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டடுள்ளதாகவும் பதுளை மாநகர பிரதம பொது சுகாதாரப் பரிசோதகர் பியல்பத்ம கூறினார்.
பதுளைப் பொலிசார், இராணுவத்தினர், பொது சுகாதாரப்பரிசோதகர்கள் ஆகியோர். இனைந்து பதுளை மாநகரில் மேற்கொன்ட சுற்றி வளைப்பு “ரெபிட் என்டிஜன்” பரிசோதனையின் போதே, மேற்படி தொற்றாளர்கள் அடையாயம் காணப்பட்டனர்.
பதுனை மாநகரில் எக்காரணமுமின்றி வெறுமனே சுற்றித்திரிந்த 250 பேர் “ரெபிட் என்டிஜன்” பரிசோதனைக் குற்படுத்தப்பட்டனர். இந்நிலையில் அவர்களின் பரிசோதனை அறிக்கைக்கமைய 40பேர் கோவிட் 19 தொற்றாளர்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் பதுளை, பிந்துனுவௌ, ககாகொல்ல கோவிட் 19 சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பதுளை மாநகரில் தனிமைப்படுத்தல் ஊரடங்கும் சட்டத்தை மீறி, வெறுமனே சுற்றித் திரிந்த மேற்குறிப்பிட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று, பொலிசார் தெரிவித்தனர்.
எம்.செல்வராஜா, பதுளை