“ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்கமுடியாது”

நாட்டிலிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்பதற்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் போதிய ஏற்பாடுகள் உள்ளடக்கப்படாத காரணத்தினால், ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இவ்வாறான காரணங்களால் ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க தமது கட்சியினால் முடியாது என அதன் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles