எதிரணிகளை ஒடுக்குவதற்கு அரசு முற்படவில்லை!

“எதிரணிகளை ஒடுக்குவதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. சட்டம் அமுலாவதைக்கண்டு எதிரணிகளுக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆண்டுவிழாவில் எதிரணிகள் ஒன்றிணைந்தமை தொடர்பிலும், அரசின் ஏதேச்சாதிகார பயணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் பற்றியும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியவை வருமாறு .

” பாதாள குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை இந்தோனேசியா பொலிஸார் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் அடிக்குமாடி குடியிருப்பில் இருக்கவில்லை. கைது பயத்தில் பெக்கோ சமன் என்பவரின் வீட்டுக் சென்று ஒளிந்திருந்தனர். இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு இந்தோனேசிய பொலிஸாரால் முடிந்துள்ளது.

அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம்தான் அனைவரையும் ஒரே இடத்தில் கைது செய்வதற்கு வழிவகுத்தது எனலாம். மேற்படி கேள்விக்கு இக்கருத்தில் பதில் இருக்கும் என நினைக்கின்றேன்.

அச்சம் காரணமாகவே அனைவரும் ஐதேக மாநாட்டில் ஒன்றிணைந்திருக்கக்கூடும். சட்டம் செயலாவதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்றே அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். எதிரணிகளை ஒடுக்குவதற்குரிய எந்தவொரு திட்டமும் எமக்க இல்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles