அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டு எதிரணியில் அமர்வது தொடர்பில் கட்சி எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஜனாதிபதியுடன் தமது கட்சிக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.