” அரசாங்க பலம் இல்லாமலேயே கோல்பேஸை மக்கள் கூட்டத்தால் நிரப்பியவர்கள் நாங்கள்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகல காரியவசம் மார்தட்டியுள்ளார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு மார்தட்டியுள்ளார்.
” ஸ்ரீமாவோ அம்மையார், ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் கோல் பேஸில் மக்கள் கூட்டத்தை திரட்டி இருந்தனர். ஆனால் அவர்களிடம் அரசாங்க பலம் இருந்தபோதே அதனை செய்தனர்.
ஆனால் எதிரணியில் இருக்கும்போது கோல்பேஸில் மக்கள் வெள்ளத்தை திரட்டிய தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச. மொட்டு கட்சிக்கே அந்த பெருமை சேரும்.” – எனவும் குறிப்பிட்டார்.
