மலையக மக்கள் குறித்து திரைப்படம்! பிரதி அமைச்சர் பிரதீப்புடன் இயக்குனர் தங்கர்பச்சான் சந்திப்பு !

பிரபல தமிழ் சினிமா இயக்குனரும், எழுத்தாளருமான தங்கர்பச்சான், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபை இன்றைய தினம் (08/06) அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

இவ் சந்திப்பின்போது மலையக மக்களின் வாழ்வியல், வரலாறு மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்கும் தனது திட்டம் குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.

இத்திரைப்படத்தில் மலையக கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளிதார்.

பிரதி அமைச்சர் இத்திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.

Related Articles

Latest Articles