எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது உத்தியோகபூர்வ கொழும்பு பயணத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (05) சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும், இலங்கை – இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

Related Articles

Latest Articles