அழகிப் போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு அபராதம்

அவுருது குமாரி போட்டியில் மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் மற்றும் அவருக்கு அந்த விலங்கை விற்ற சந்தேக நபர் ஆகியோருக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கவனத்தை ஈர்த்த இச்சம்பவம் குறித்து, வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பெல்லன்விலையில் உள்ள கொழும்பு மாவட்ட வனவிலங்கு அலுவலகத்தினால் விசாரணைகள் நடத்தப்பட்டன.

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் கூற்றுப்படி, அந்தப் பெண்ணும் பணத்திற்காக மலைப்பாம்பை வழங்கிய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு, வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

ஜூலை 22 அன்று மீண்டும் இடம்பெற்ற விசாரணையின் போது, சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பாதுகாக்கப்பட்ட விலங்கை வைத்திருந்ததற்கும் நடனமாடப் பயன்படுத்தியதற்கும் இளம் பெண்ணுக்கு ரூ. 50,000 அபராதமும், பாதுகாக்கப்பட்ட விலங்கை வைத்திருந்ததற்கும் விற்றதற்கும் மற்றைய சந்தேக நபருக்கு ரூ. 100,000 அபராதமும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட எந்தவொரு வனவிலங்கையும் வைத்திருப்பது, கொண்டு செல்வது, காட்சிப்படுத்துவது அல்லது விற்பனை செய்வது கடுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது என்றும், மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles