” என் ரஜினி நலமாக இருக்க வேண்டும்.” என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் இன்று பொதுமக்களிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பின்னர், ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
” ரஜினி எடுத்த முடிவில் சற்றே ஏமாற்றம் இருந்தாலும் அவரது ஆரோக்கியம் தான் எனக்கு முக்கியம். என் ரஜினி நலமாக இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும்”. ரசிகர்களின் மனநிலைதான் எனக்கும் உள்ளது. நண்பர் ரஜினி ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. பிரசாரம் முடிந்து சென்னை திரும்பியதும் ரஜினியை கண்டிப்பாக சந்திப்பேன்.” – என்றார்.