எம்.பி.பதவி யாருக்கு? முடிவெடுப்பதில் ஐ.தே.க. திணறல்!

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் ஊடகப்பிரிவு  அறிவித்துள்ளது.

ஐ.தே.கவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜோன்அமரதுங்கவை நியமிப்பதற்கு கட்சி தலைவர் முடிவெடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அதனை ஐ.தே.க.மறுத்துள்ளது.

அதேவேளை, தேசியப்பட்டியல் விவகாரம் குறித்து இவ்வாரத்துக்குள் கட்சி இறுதி முடிவை எடுக்கும் எனவும், அடுத்த சபை அமர்வின்போது புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் செய்வார் எனவும் ஐதேக உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles