எரிபொருளுக்காக அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை தொடர்ந்தும் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சிபிசியின் முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், எரிபொருள் ஒதுக்கீடுகள், எரிபொருள் சரக்கு இறக்குமதித் திட்டம், எரிபொருள் விநியோகம் மற்றும் தேசிய எரிபொருள் பாஸ் QR முறைமை பற்றி விவாதிக்கப்பட்டது
எரிபொருள் இறக்குமதி, மேலாண்மை, விநியோகம் மற்றும் விற்பனை தரவுகளை ஆய்வு செய்யப்பட்டதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
