எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் இரசாயன பதார்த்தம், உரிய அளவில் இல்லாதமை காரணமாகவே, எரிவாயு விநியோகம் மற்றும் விற்பனையை இடைநிறுத்துமாறு அறிவித்ததாக இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
எரிவாயு கசிவை கண்டறியும் மணத்தை உருவாக்கும் எதில் மெகப்டன் கொள்கலனில் 14 அலகுகளாக இருக்கவேண்டிய நிலையில், அது தற்போது 5 அலகுகளாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், எரிவாயு கொல்கலன் விநியோகத்தை இடைநிறுத்துமாறு லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள கப்பலிலிருந்து எரிவாயு மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
உள்ளூர் தர நியமங்களுக்கு அமைய பொருந்துமாயின் மட்டுமே, அதனைத் தரையிறக்க அனுமதிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழு, இன்று (3) முத்துராஜவளையில் உள்ள லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு முனைத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










