எரிவாயு விலை அதிகரிப்பு: லாஃப்ஸ் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் லாஃப்ஸ்  எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எதனடிப்படையில் விலை அதிகரிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலை தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles