எல்ல பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

பதுளை, எல்ல ஹெல்ப பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை – பதுளை பிரதான வீதியில் எல்ல ஹல்ப பகுதியில் வைத்தே இன்று மதியம் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles