மட்டக்களப்பு, ஏறாவூர் சம்பவம் தொடர்பில் இரு இராணுவ அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணக்கட்டுப்பாட்டை மீறினர் என்ற குற்றச்சாட்டுக்காக ஏறாவூர் பகுதியில் சிலரை தரையில் முழந்தாளிட வைத்து இராணுவத்தினர் தண்டனை வழங்கினர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து அச்சம்பத்துக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன.
இந்நிலையிலேயே அதனுடன் தொடர்புபட்ட இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாயும் இடம்மாற்றப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
