பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 1992 ஆம் ஆண்டு ரோஜா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், சைனீஸ் என பல்வேறு மொழிகளில் சுமார் 145க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம் முக்கிய பங்கு வகித்தார். தனது தாய் துணிச்சலானவர் என ஏ.ஆர்.ரகுமான் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.