ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் ரணில் பக்கம் ‘பல்டி’!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கபோவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்தார்.

” ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் விரைவில் ஜனாதிபதியிடம் சரணடைவார்கள்.  நெருக்கடியான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றார். அவர் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டியுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருகின்றார்.”  -எனவும் ஹரிசன் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles