ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு-2025 கட்சி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் நாளை பிற்பகல் 01.00 மணி முதல் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
“தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம் -எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருள் இடம்பெறும் இம்மாநாட்டில் நடப்பாண்டுக்கான கட்சியின் பிரதான பதவி நிலைகளுக்கான நிர்வாக குழாம் தெரிவுசெய்யப்படவுள்ளது.
அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான கட்சியின் செயற்குழுவிற்கான பெயர்களும் அறிவிக்கப்படவுள்ளன.