ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்குரிய ஆரம்பக்கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதென நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பின் பச்சைக்கொடிகாட்ட மறுப்பதால் ஐதேக மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமான திசையை நோக்கி நகரவில்லை.
எனவே, உள்ளாட்சிசபைத் தேர்தலை யானை சின்னத்தின்கீழ் எதிர்கொள்வதற்கு ஐதேக திட்டமிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக மறுசீரமைப்புக்கான ஆரம்பக்கட்ட திட்டங்கள் வெளியிடக்கூடும்.
அதன்பிறகு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டிலேயே இறுதியான – உறுதியான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.